செய்திகள்

ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ள ஹிந்திப் படம்: லக்‌ஷ்மி எனப் பெயர் மாற்றம்

31st Oct 2020 12:25 PM

ADVERTISEMENT

 

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ள லக்‌ஷ்மி பாம் என்கிற ஹிந்திப் படத்தின் பெயர் லக்‌ஷ்மி என மாற்றப்பட்டுள்ளது. 

2011-ல் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா படம் லக்‌ஷ்மி பாம் என்கிற பெயரில் ஹிந்திப் படமாக உருவாகியுள்ளது. ராகவா லாரன்ஸ் - அக்‌ஷய் குமார் முதல்முறையாக இணைந்துள்ளார்கள். கதாநாயகியாக கியாரா அத்வானி நடித்துள்ளார்.

இந்தப் படம் மே 22 அன்று வெளிவருவதாக இருந்தது. ஆனால் தற்போதைய சூழலில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகவுள்ளதாகக் கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. பாலிவுட்டில் அனைவரும் எதிர்பார்த்த ஒரு படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாவது திரையுலக வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

நவம்பர் 9 அன்று முதல் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகவுள்ள இப்படத்தின் பெயர் லக்‌ஷ்மி என மாறியுள்ளது. லக்‌ஷ்மி பாம் என்கிற தலைப்பு மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகப் புகார்கள் எழுந்த நிலையில் தணிக்கை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் லக்‌ஷ்மி என மாற்றப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லருக்கு யூடியூப் தளத்தில் 24 மணி நேரத்தில் 70 மில்லியன் பார்வைகள் கிடைத்தன. இந்தியாவில் இந்த எண்ணிக்கையைப் பெற்ற முதல் படம் என்கிற பெருமையைப் பெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT