செய்திகள்

மஹா படப்பிடிப்பு நிறைவு: சிம்புவுக்கு நன்றி தெரிவித்த ஹன்சிகா

30th Oct 2020 04:50 PM

ADVERTISEMENT

 

ஹன்சிகாவின் 50-வது படம் மஹா. அறிமுக இயக்குநர் யு.ஆர். ஜமீல் இயக்கி வருகிறார். கருணாகரன், தம்பி ராமையா போன்றோரும் நடிக்கிறார்கள். இசை - ஜிப்ரான்.

2015-ல் வெளியான வாலு படத்தில் சிம்புவும் ஹன்சிகாவும் இணைந்து நடித்தார்கள். இருவரும் காதலிப்பதாக அறிவித்தவர்கள் பிறகு கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்துபோனார்கள். இந்நிலையில் மஹா படத்தின் மூலமாக இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ளார்கள்.

மஹா படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றதையடுத்து ஹன்சிகா கூறியதாவது:

ADVERTISEMENT

என்னுடைய கனவுப் படமான மஹா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கடினமான சூழலில் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. அரசின் வழிக்காட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி படப்பிடிப்பை நடத்தினோம். 2021 கோடைகாலத்தில் படம் வெளியாகும். இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்த சிம்புவுக்கு நன்றி. அவர் நடித்துள்ள காட்சிகள் சர்வதேச ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT