செய்திகள்

அனிதா சம்பத்தை உசுப்பேற்றுகிறார் சனம் ஷெட்டி: பிக் பாஸ் நிகழ்ச்சியில் சம்யுக்தா குற்றச்சாட்டு

DIN

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு எதிராக அனிதா சம்பத்தை சனம் ஷெட்டி உசுப்பேற்றுகிறார் என சம்யுக்தா குற்றம் சாட்டியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியைப் பிரபல நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

முதல் நாளில் ரம்யா பாண்டியன், ஆஜித், ஆரி, அனிதா சம்பத், வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சோம், ஷிவானி, சனம் ஷெட்டி, பாலா, கேப்ரியலா, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, ரேகா, ரியோ, சம்யுக்தா என 16 பேர் பிக் பாஸ் இல்லத்துக்குள் நுழைந்தார்கள். பிறகு பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா புதிய போட்டியாளராக நுழைந்தார். 

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. குடும்பத்தை விட்டு பிக் பாஸ் இல்லத்துக்குள் வசிக்கும் போட்டியாளர்கள் பலமுறை குடும்பத்தை நினைத்து உணர்ச்சிவசப்பட்டு அழுவார்கள். இந்தமுறையும் பல போட்டியாளர்கள் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் ஞாபகம் வந்து அழுதார்கள்.

நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் யாரை மிஸ் செய்கிறீர்கள் என்றொரு கேள்வி கேட்கப்பட்டது. போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்களை நினைத்து கண்ணீருடன் பேசினார்கள். அனிதா சம்பத் தன்னுடைய கணவர், தாயைப் பற்றி நீண்ட நேரம் பேசினார். அவருடைய பேச்சு சுவாரசியமாக இல்லாததாலும் நீண்ட நேரம் சென்றதாலும் ஆஜித், ரம்யா பாண்டியன், ஷிவானி, சுரேஷ் போன்றோர் தங்களுடைய அதிருப்தியை பல்வேறு விதத்தில் தெரிவித்தார்கள். அனிதா பேசிக்கொண்டிருக்கும்போதே ரம்யா பாண்டியன், ஷிவானி போன்றோர் தங்களுக்குள் அவரை கேலி செய்து பேசினார்கள். இதைப் பொருட்படுத்தாமல் அனிதா தொடர்ந்து பேசியபோது அவரை இடைமறித்து, பேச்சு மிகவும் நீளமாகப் போகிறது என்று குறை சொன்னார் சம்யுக்தா. இதனால் தன்னுடைய பேச்சைப் பாதியிலேயே நிறுத்திக் கொண்டார் அனிதா. பிறகு இதுபற்றி சம்யுக்தாவிடம் கேள்வியும் எழுப்பினார். நான் அதிகமாகப் பேசினால் அதை பிக் பாஸ் குழுவினர் எடிட் செய்துவிடுவார்கள். நீங்கள் ஏன் அப்படிப் பேசினீர்கள் என்றார்.

இந்தப் பிரச்னை நேற்றுடன் ஓயவில்லை என்பது தெரிகிறது. இன்று அனிதா சம்பத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை சனம் ஷெட்டி எடுத்துள்ளது பிக் பாஸ் இல்லத்தில் புதிய மோதலை உருவாக்கும் எனத் தெரிகிறது. இதனால் தனக்கு எதிராக அனிதா சம்பத்தை சனம் ஷெட்டி உசுப்பேற்றுகிறார் என சம்யுக்தா பேசும் காட்சிகள் இன்றைய பிக் பாஸ் விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT