செய்திகள்

பிக் பாஸ் - விடுதி அறை விவகாரம்: பாடகி சுசித்ரா விளக்கம்

29th Oct 2020 04:25 PM

ADVERTISEMENT

 

பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விரைவில் கலந்துகொள்ளவிருக்கும் பாடகி சுசித்ரா, தன்னைப் பற்றிய வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியைப் பிரபல நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

முதல் நாளில் ரம்யா பாண்டியன், ஆஜித், ஆரி, அனிதா சம்பத், வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சோம், ஷிவானி, சனம் ஷெட்டி, பாலா, கேப்ரியலா, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, ரேகா, ரியோ, சம்யுக்தா என 16 பேர் பிக் பாஸ் இல்லத்துக்குள் நுழைந்தார்கள். பிறகு பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா புதிய போட்டியாளராக நுழைந்தார். 

ADVERTISEMENT

அர்ச்சனாவுக்கு அடுத்ததாக வைல்ட்கார்ட் போட்டியாளராக பிக் பாஸ் இல்லத்துக்குள் விரைவில் நுழையவுள்ளார் பாடகி சுசித்ரா. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் சுசித்ரா, சில நாள்களுக்கு முன்பு நள்ளிரவில் தனது அறையிலிருந்து கதறிக்கொண்டு வெளியில் ஓடி வந்ததாகத் தகவல்கள் வெளியாகின. என்னைக் கொலை செய்ய வர்றாங்க, காப்பாற்றுங்கள், அறையின் கதவை யாரோ தட்டுகிறார்கள் என்று விடுதியின் வரவேற்பறைக்குச் சென்று முறையிட்டதாகவும் கூறப்படுகிறது. பிறகு இதுபோல நடக்க வாய்ப்பில்லை, இனிமேல் கவலை வேண்டாம். பாதுகாப்புக்கு நாங்கள் உறுதி என்று விடுதி மற்றும் பிக் பாஸ் தரப்பில் பதில் அளித்ததால் சமாதானமாகி நள்ளிரவுக்குப் பிறகு தனது அறைக்கு சுசித்ரா திரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகின. 

இதையடுத்து தன்னைப் பற்றிய செய்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் சுசித்ரா. இன்ஸ்டகிராமில் அவர் கூறியுள்ளதாவது:

சில தவறான செய்திகளுக்கு நான் விளக்கம் அளிக்கவுள்ளேன். எனது அறையில் நான் பயந்துவிட்டதாகவும் வெளியே நடமாடியதாகவும் வெளியான செய்திகளை நம்பவேண்டாம். நான் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளேன். என்னை நன்குக் கவனித்துக் கொள்கிறார்கள். இதுபோன்ற ஒரு காட்சி எனது அறையில் இருந்து கிடைக்கும்போது யார் புகார் அளிப்பார்கள் என்று தனது விடுதி அறையைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். 

இன்ஸ்டகிராமில் சுசித்ரா வெளியிட்டுள்ள புகைப்படம்
Tags : Cinema suchitra bigg boss
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT