செய்திகள்

கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த பிரபல நடிகை

18th Oct 2020 06:24 PM

ADVERTISEMENT

 

சென்னை: பிரபல நடிகை தமன்னா கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளார்.

பிரபல நடிகை தமன்னாவுக்கு சில நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு பாதிப்பு குறைந்ததால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டார்.

இந்நிலையில் தமன்னா தற்போது கரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘கரோனாவில் இருந்து முழுவதுமாக குணம் அடைந்து விட்டேன். எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. நான் நோயுற்று, மிகவும் சோர்வடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். உரிய சிகிச்சையால் நான் தற்போது நலமாக உள்ளேன். கனிவான சேவை, அக்கறை என்னை குணமடைய வைத்தது’ என்று பதிவிட்டுள்ளார்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT