செய்திகள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கஸ்தூரிக்கு சம்பளம் தரவில்லையா?: விஜய் தொலைக்காட்சி விளக்கம்

1st Oct 2020 10:55 AM

ADVERTISEMENT

 

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டார். இந்நிலையில் ட்விட்டரில் நடிகை கஸ்தூரி கூறியதாவது: 

விஜய் டிவி கடந்த ஒரு வருடமாக எனது சம்பளத்தைத் தரவில்லை. இதற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்குக் காரணமே, ஆதரவற்ற குழந்தைகளின் அறுவை சிகிச்சை செலவுக்காகத்தான். உங்கள் தவறான வாக்குறுதிகளை நான் எப்போதும் நம்பியதில்லை. ஆனால் இதை நான் எதிர்பார்க்கவில்லை என்றார். 

இதற்கு விஜய் தொலைக்காட்சி பதில் அளித்துள்ளது. அவர்கள் தரப்பில் கூறியதாவது:

ADVERTISEMENT

நாங்கள் பொறுப்பான ஒரு தொலைக்காட்சி நிறுவனமாகும். ஒப்பந்தத்தின்படி அனைவருக்கும் சரியான முறையில் சம்பளம் கொடுத்துவிடுவோம். பிக் பாஸில் கலந்துகொண்டதற்கான தொழில்முறை சம்பளம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கஸ்தூரிக்கு வழங்கப்பட்டு விட்டது. ஜிஎஸ்டி பதிவுமுறையில் சிக்கல் உள்ளதால் ஜிஎஸ்டி தொகையை மட்டும் நிறுத்தி வைத்துள்ளோம். அதற்கான ஆவணங்களை கஸ்தூரி அளிப்பார் எனக் காத்திருக்கிறோம். அவற்றை ஒப்படைத்த பிறகு அதற்கான தொகையையும் அளித்துவிடுவோம் மேலும் விஜய் தொலைக்காட்சியில் கலந்துகொண்ட மற்றொரு நிகழ்ச்சிக்கான கட்டண விவரத்தையும் அவர் அளிக்கவில்லை. அதனால் அந்தத் தொகையை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளது. 

Tags : Bigg Boss Tamil
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT