செய்திகள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நானா?: பிரபல நடிகை பதில்

1st Oct 2020 12:17 PM

ADVERTISEMENT

 


பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் கலந்துகொள்ளவில்லை என பிரபல நடிகை கிரண் தெரிவித்துள்ளார். 

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 4 முதல் தொடங்குகிறது. இம்முறையும் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

ஜெமினி படத்தின் மூலம் தமிழில் அறிமுமாகி வின்னர், அன்பே சிவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகை கிரண், இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியது. இதை கிரண் மறுத்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு கிரணை வரவேற்பதாகச் சமூகவலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதில் அளித்த கிரண், நான் வீட்டிலேயே மகிழ்ச்சியாக உள்ளேன் எனப் பதில் அளித்துள்ளார். இதன்மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT