நியூயார்க்: ‘ஸ்டார் வார்ஸ்’ தொடர் வரிசைத் திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் டேவிட் ப்ரூஸ் (85) ஞாயிறன்று மரணமடைந்தார்.
தொழில்முறை உடற்பயிற்சி வல்லுனரான டேவிட் ப்ரூஸ் புகழ் பெற்ற ஹாலிவுட் தொடர் வரிசைத் திரைப்படமான ‘ஸ்டார் வார்ஸ்’ மூன்று பாகங்களில் நடித்துள்ளார்.
அதில் வரும் ‘டார்த் வேடர்’ என்ற கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்து அவர் பலரையும் ஈர்த்தார்.
ADVERTISEMENT
இந்நிலையில் சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் ஞாயிறன்று மரணமடைந்தார்.
அவரது மறைவிற்கு ஹாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.