செய்திகள்

தெலுங்கு கப்பேலா: கதாநாயகியாக நடிக்கும் அனிகா

26th Nov 2020 12:22 PM

ADVERTISEMENT

 

சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி அதிகப் பாராட்டுகளைப் பெற்ற மலையாளப் படம் - கப்பேலா (Kappela). கரோனா ஊரடங்குக்கு முன்பு மார்ச் 6 அன்று திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. மலையாளத்தில் இயக்கிய முகமது முஸ்தபா தான் தெலுங்கிலும் இயக்கவுள்ளார். சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் நாக வம்சி தயாரிக்கிறார். ஸ்ரீநாத் பாசி வேடத்தில் விஷ்வக் சென் நடிக்கவுள்ளார். ரோஷன் மேத்யூ வேடத்தில் நடிப்பதற்கான நடிகர் தேர்வு நடைபெற்று வருகிறது. 

கப்பேலா படத்தில் ஜெஸ்ஸி வேடத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றுள்ளார் அன்னா பென். இதனால் இவருடைய வேடத்தில் யாரை நடிக்க வைப்பது என்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. அனிகா சுரேந்திரன் (விஸ்வாசம் படத்தில் அஜித் மகளாக நடித்தவர்), கீர்த்தி ஷெட்டி, நித்யா ஷெட்டி என மூன்று நடிகைகள் பரிசீலனையில் இருந்தார்கள்.

ADVERTISEMENT

விஸ்வாசம், என்னை அறிந்தால், பாஸ்கர் தி ராஸ்கல் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் மிகவும் புகழ் பெற்ற அனிகா சுரேந்திரன், அன்னா பென் வேடத்தில் நடிக்கத் தேர்வாகியுள்ளார்.

இதையடுத்து கப்பேலாவின் தெலுங்கு ரீமேக் குறித்த விவரங்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Anikha Surendran Kappela
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT