செய்திகள்

புற்று நோய் பாதிப்பால் மரணமடைந்த இளம் நடிகை

13th Jul 2020 11:40 AM

ADVERTISEMENT

 

புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி நடிகை திவ்யா செளக்சே காலமாகியுள்ளார். அவருக்கு வயது 28.

திவ்யாவின் முதல் படமான ஹை அப்னா தில் தோ ஆவாரா படத்தின் இயக்குநர் இதுபற்றி கூறியதாவது: கடந்த ஒரு வருடமாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் திவ்யா. தகுந்த சிகிச்சையால் அதன் பாதிப்பிலிருந்து அவர் மீண்டுவிட்டாலும் சில மாதங்கள் கழித்து புற்று நோயால் மீண்டும் பாதிக்கப்பட்டார். இந்தமுறை அதிலிருந்து அவரால் விடுபட முடியவில்லை. அவருடைய சொந்த ஊரான போபாலில் மரணமடைந்துள்ளார் என்றார். 

இறப்பதற்கு ஒரு நாள் முன்பு தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் திவ்யா எழுதியிருந்ததாவது:

ADVERTISEMENT

நான் சொல்ல விரும்புவதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. நான் தலைமறைவாகி பல மாதங்கள் ஆகிவிட்டன. பலர் இதுபற்றி விசாரித்தீர்கள். இப்போது சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் மரணப் படுக்கையில் உள்ளேன். கேள்விகள் எதுவும் வேண்டாம். நீங்கள் எனக்கு எவ்வளவு முக்கியம் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்று எழுதியிருந்தார். 

திவ்யா செளக்சேவின் மரணத்துக்கு ரசிகர்களும் பாலிவுட் கலைஞர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். 

ADVERTISEMENT
ADVERTISEMENT