செய்திகள்

கர்ப்ப காலத்தில் சிரசாசனம் பயிற்சியை மேற்கொண்ட நடிகை அனுஷ்கா சர்மா

DIN

விராட் கோலி உதவியுடன் கர்ப்ப காலத்தில் சிரசாசனம் பயிற்சியை மேற்கொண்டு, அதன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை அனுஷ்கா சர்மா.

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் 2017-ல் இத்தாலியில் திருமணம் செய்துகொண்டார்கள். அனுஷ்கா சர்மா தற்போது கர்ப்பமாக உள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரில் கடைசி மூன்று ஆட்டங்களில் இருந்து இந்திய கேப்டன் விராட் கோலி விலகியுள்ளார். ஜனவரியில் தன் மனைவிக்குக் குழந்தை பிறக்கவுள்ளதால் அவர் அருகில் இருக்க வேண்டும் என்பதற்காக முதல் டெஸ்ட் முடிந்த பிறகு இந்தியாவுக்குத் திரும்புகிறார்.

இந்நிலையில் கர்ப்ப காலத்தில் சிரசாசனம் என்கிற யோகக்கலைப் பயிற்சியை விராட் கோலியிடன் உதவியுடன் மேற்கொண்டுள்ளார் அனுஷ்கா சர்மா. இதன் புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார். (தலையை ஊன்றி ஒரு இருக்கையாக அமைத்துக்கொண்டு நிற்பதால் இந்தப் பயிற்சிக்கு சிரசாசனம் என்று பெயர்.) இதுபற்றி இன்ஸ்டகிராமில் அவர் கூறியதாவது:

இந்தப் பயிற்சி மிகவும் கடினமானது. என் வாழ்க்கையில் யோகக் கலைக்கு முக்கியப் பங்கு உள்ளதால் கர்ப்பமாவதற்கு முன்பு, நான் செய்த அனைத்து யோகக் கலைப் பயிற்சிகளையும் (சிலது தவிர) அனைத்தையும் எனது மருத்துவர் செய்யச் சொன்னார். இவற்றைச் செய்ய ஒருவரின் உதவி தேவை. சிரசாசனத்தை நான் பல வருடங்களாகச் செய்து வருகிறேன். இப்போது செய்தபோது நான் சாய்ந்துகொள்ள சுவரும் நான் விழாமல் இருப்பதற்காக என் கணவரின் உதவியும் தேவைப்பட்டன. இணையம் வழியாக என்னுடைய யோகக் கலை ஆசிரியரின் முன்னிலையில் இதைச் செய்தேன். யோகக் கலைப் பயிற்சிகளை நான் கர்ப்பமாக இருக்கும்போதும் செய்வதில் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT