செய்திகள்

கேலி, கிண்டல்களால் நீச்சல் குளப் புகைப்படத்தை நீக்கிய செளந்தர்யா ரஜினிகாந்த்

2nd Jul 2019 09:41 AM | சினேகா

ADVERTISEMENT

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் தன் மகன் வேத்-உடன் நீச்சல் குளத்தில் விளையாடிய போது எடுக்கப்பட்ட போட்டோவை தனது டிவிட்டரில் அண்மையில் பதிவிட்டிருந்தார். அதில் அவர் 'குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே நீச்சல் கற்றுக் கொடுங்கள் ...அதன்பின் தாங்களாகவே அதில் தேர்ச்சி பெற்றுவிடுவார்கள். நீச்சல் கற்பது அத்யாவசியமான ஒரு செயல். #TeachThemYoung #KeepThemActive #WaterFun #EnsureSafetyAlways #NeverLeaveThemAlone #Motherhood #Bliss என்று சில ஹேஷ்டேக்ஸ் உருவாக்கி தனது மகிழ்ச்சியான தருணங்களை வார்த்தைகளாய் பதிவிட்டிருந்தார்.

இந்தப் புகைப்படங்களைப் பார்த்த சிலர் சென்னையே தண்ணீர் கஷ்டத்தில் மூழ்கியிருக்கும் போது மகனுடன் நீச்சல் குளத்தில் உற்சாகமாக விளையாட உங்களுக்கு எப்படி மனம் வந்தது? என்று கேள்வி எழுப்பினர். இதைத் தொடர்ந்து அப்பதிவை நீக்கிய செளந்தர்யா, ‘சென்னைவாசிகள் எதிர்கொள்ளும் தற்போதைய தண்ணீர் பிரச்னையை கருத்தில் கொண்டு எனது சொந்த பதிவுக்காக பகிரப்பட்ட படங்களை அகற்றிவிட்டேன். சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு உடல் செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதே அந்தப் படங்களை பதிவிட்டேன்’ என்று தன்னிலை விளக்கத்தைப் பகிர்ந்துள்ளார்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT