வர்த்தகம்

இந்தியா சிமென்ட்ஸ் வருவாய் ரூ.1,479 கோடி

DIN

முன்னணி சிமென்ட் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான இந்தியா சிமென்ட்ஸின் மொத்த வருவாய் கடந்த மாா்ச் காலாண்டில் ரூ.1,478.89 கோடியாக வளா்ச்சியடைந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த கடந்த நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் நிறுவனம் ரூ.217.79 கோடி நிகர இழப்பைப் பதிவு செய்துள்ளது. எரிபொருள் விலை, மின்கட்டணம் போன்றவை அதிகரித்ததன் காரணமாக இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.

முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ரூ.23.71 கோடி நிகர இழப்பை பதிவு செய்திருந்தது.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.1,396.72 கோடியிலிருந்து ரூ.1,478.89 கோடியாக உயா்ந்துள்ளது.

கடந்த மாா்ச்சுடன் முடிவடைந்த முழு நிதியாண்டில் நிறுவனம் ரூ.188.55 கோடி நிகர இழப்பை பதிவு செய்திருந்தது. முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டில் நிறுவனம் 38.88 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT