வர்த்தகம்

இந்திய என்ஜிஓக்களுக்கு ரூ.2,430 கோடி வெளிநாட்டு நிதியுதவி

DIN

இந்திய என்ஜிஓக்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து ரூ. 2,430.80 கோடி அளவுக்கு நிதியுதவி கிடைத்திருப்பதாக மாநிலங்களவையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
 இதுதொடர்பாக மாநிலங்களவையில் புதன்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
 2021-22 இல் இந்திய என்ஜிஓக்கள் ரூ. 905.50 கோடி நிதியுதவியைப் பெற்றுள்ளன. இதுவே 2020-21 இல் 798.18 கோடி நிதியுதவியும், 2019-20 இல் ரூ. 727.16 கோடி நிதியுதவியும், 2019-20 இல் ரூ. 16 கோடி நிதியுதவியும் பெற்றுள்ளன.
 கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் ரூ. 2430.80 கோடி நிதியுதவியை என்ஜிஓக்கள் பெற்றுள்ளன.
 நிகழாண்டு மார்ச் 10 ஆம் தேதி நிலவரப்படி, வெளிநாடுகளின் பங்களிப்பை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி (எஃப்சிஆர்ஏ) 16,383 பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் இயங்கி வருகின்றன. அதில் 14,966 என்ஜிஓக்கள் 2021-22 ஆம் நிதி ஆண்டிற்கான வருடாந்திர வரவு-செலவு கணக்குகளைத் தாக்கல் செய்துள்ளன.
 எஃப்சிஆர்ஏ-இன் கீழ் பதிவு செய்யப்பட்ட சில என்ஜிஓக்கள் தங்களுக்குக் கிடைக்கும் நிதியை தவறாகப் பயன்படுத்துவதாகவும் வேறுபணிகளுக்கு நிதியைச் செலவிடுவதாகவும் புகார் மனுக்கள் அரசுக்கு வந்துள்ளன. அத்தகைய புகார்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
 1,827 என்ஜிஓக்களின் உரிமம் ரத்து: கடந்த 2018- 2022 காலக்கட்டத்தில் சட்ட விதிகளை மீறியதற்காக கடந்த 5 ஆண்டுகளில் 1,827 என்ஜிஓக்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிகழாண்டு மார்ச் 10 ஆம் தேதி நிலவரப்படி 16,383 பதிவு செய்யப்பட்ட என்ஜிஓக்கள் செயல்பாட்டில் உள்ளன.
 436 துணை ராணுவத்தினர் தற்கொலை: துணை ராணுவத்தினர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் நித்யானந்த் ராய் கூறிய
 தாவது:
 சிஆர்பிஎஃப், எல்லைக் காவல் படை, சிஐஎஸ்எஃப், ஐடிபிபி போன்ற துணை ராணுவ அமைப்புகளில் கடந்த 3 ஆண்டுகளில் 436 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
 இதில் 2022-இல் 135 பேரும், 2021-இல் 157 பேரும், 2020-இல் 144 பேருமாக மொத்தம் 436 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதுதொடர்பான காரணங்களைக் கண்டறிந்து தற்கொலையைத் தடுக்கும் வகையில் ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு அதன் அறிக்கையை தயார் செய்து வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT