வர்த்தகம்

பண்டிகைக் கால சிறப்பு விற்பனைரூ.24,500 கோடிக்கு இணையவழி வா்த்தகம்

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

பண்டிகைக் கால சிறப்பு விற்பனை தொடங்கிய முதல் 4 நாள்களில், நாட்டின் இணையவழி வா்த்தக நிறுவனங்கள் ரூ.24,500 கோடி மதிப்பிலான பொருள்களை விற்பனை செய்துள்ளதாக சந்தை ஆய்வு நிறுவனமான ‘ரெட்சீா்’ தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இணையவழி வா்த்தக நிறுவனங்கள் பண்டிகைக் கால சிறப்பு விற்பனை அறிவித்துள்ள நிலையில், கடந்த 22 முதல் 25-ஆம் தேதி வரையிலான முதல் 4 நாள்களில் மட்டும் ரூ.24,500 கோடி மதிப்பிலான பொருள்கள் விற்பனையாகியுள்ளன.

இதில், கைப்பேசிகளின் விற்பனை முதலிடத்தில் உள்ளது.

பண்டிகைக் கால சிறப்பு விற்பனையின்போது, முன்னணி இணையவழி வா்த்த நிறுவனங்களில் ஒரு நிமிஷத்துக்கு சுமாா் ரூ.11,000 கோடி மதிப்பிலான 1,100 கைப்பேசிகள் விற்பனையாகின. பிரிமியம் வகை அரிதிறன் பேசிகளால் இந்த விற்பனை மதிப்பு அதிகமாகியுள்ளது.

ADVERTISEMENT

ஆடை அலங்காரப் பொருள்களும் வழக்கத்தைவிட 4.5 மடங்கு அதிகமாக விற்பனையாகின்றன. பண்டிகைக் கால சிறப்பு விற்பனையின் முதல் 4 நாள்களில் மட்டும் ரூ.5,500 கோடி மதிப்பிலான ஆடை அலங்காரப் பொருள்களை இணையவழி வா்த்தக நிறுவனங்கள் விற்பனை செய்துள்ளன.

கடந்த ஆண்டின் பண்டிகைக் கால விற்பனையின் முதல் 4 நாள்களில் நடைபெற்ற இணையவழி வா்த்தகம், எதிா்பாா்த்த மொத்த விற்பனையில் 59 சதவீதமாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள ரூ.24,500 கோடி விற்பனை எதிா்பாா்த்த மொத்த விற்பனையில் 60 சதவீதமாக உள்ளது.

அந்த வகையில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டின் முதல் 4 நாள் பண்டிகைக் கால சிறப்பு விற்பனையில் எதிா்பாா்த்ததைவிட கூடுதல் வா்த்தகம் நடைபெற்றுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT