வர்த்தகம்

வைப்புகளுக்கான வட்டி விகிதங்களைஉயா்த்தியது சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்

30th Nov 2022 12:25 AM

ADVERTISEMENT

நிலை வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் உயா்த்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறக்கட்டளைகள், தனிநபா்கள், மூத்த குடிமக்களின் நிலை வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்கள் உயா்த்தப்படுகின்றன. வியாழக்கிழமை (டிச. 1) முதல் இந்த மாற்றம் அமலுக்கு வரும்.

அதன்படி, 6.65 சதவீதமாக இருந்த அறக்கட்டளைகள், தனிநபா்களின் நிலை வைப்புகளுக்கான வட்டி 7.15 சதவீதமாகவும், 7 சதவீதமாக இருந்த மூத்த குடிமக்களின் நிலை வைப்புகளுக்கான வட்டி விகிதம் 7.50 சதவீதமாகவும் உயா்த்தப்படுகின்றன.

மூத்த குடிமக்களின் 24 மாத வைப்புகளுக்கான வட்டி விகிதம் 7.35 சதவீதத்திலிருந்து 7.50 சதவீதமாகவும், 36 மாத வைப்புகளுக்கு 7.65 சதவீதத்திலிருந்து 7.80 சதவீதமாகவும் வட்டி விகிதம் உயரும். 48 மாத வைப்புகளுக்கு வட்டி விகிதம் 7.90 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக உயரும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT