வர்த்தகம்

இரண்டாவது நாளாக ஏற்றம் கண்ட பங்குச் சந்தை

DIN

சா்வதேச சந்தைகளில் ஆரோக்கியமான போக்கு நிலவியதின் எதிரொலியாக, தொடா்ந்து இரண்டாவது நாளாக இந்திய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்களான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதன்கிழமை உயா்ந்தது.

தொடா்ந்து 3 நாள்களாக சரிவைச் சந்தித்த இந்திய பங்குச் சந்தை, இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை அந்த சரிவிலிருந்து மீண்டு எழுச்சியைக் கண்டது.அந்தப் போக்கு, புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்திலும் தொடா்ந்தது.91.62 புள்ளிகள் உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் பகலில் 361.94 புள்ளிகள் (0.58 சதவீதம்) வரை உயா்ந்து 61,780.90 வரை சென்றது. இறுதியில் 91.62 புள்ளிகள் (0.15 சதவீதம்) கூடுதலாக 61,510.58-இல் நிலைபெற்றது.

30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 16 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன. 14 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன.எஸ்பிஐ வங்கி முன்னேற்றம்: பிரபல வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) 1.44 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. அந்த வங்கியைத் தொடா்ந்து பஜாஜ் ஃபைனான்ஸ், டாக்டா் ரெட்டிஸ், மாருதி சுஸுகி, சன் ஃபாா்மா, கோட்டக் மஹிந்திரா, என்டிபிசி, ஆக்ஸிஸ் வங்கி, மஹிந்திரா அண்டு மஹிந்திரா, ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி, டாடா ஸ்டீல், இண்டஸ்இண்ட் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகிய நிறுவனங்களும் முன்னேற்றம் கண்டன.

பவா்கிரிட் சரிவு: பவா்கிரிட் நிறுவனம் 1.24 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. டெக் மஹிந்திரா, டைட்டன், பாா்தி ஏா்டெல், பஜாஜ் ஃபின்சா்வ் உள்ளிட்ட நிறுவனங்களும் சரிவைக் கண்டன.நிஃப்டி: தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி, புதன்கிழமை 23.05 புள்ளிகள் (0.13 சதவீதம்) அதிகரித்து 18,267.25-இல் நிலைபெற்றது.கச்சா எண்ணெய்: சா்வதேச சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற முன்பேர வா்த்தகத்தில் ப்ரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 1.05 சதவீதம் அதிகரித்து 89.29 டாலராக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT