வர்த்தகம்

மீண்டும் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தும் ஏர்டெல், ஜியோ?

DIN

ஏர்டெல், ஜியோ மற்றும் வோடஃபோன் ஐடியா நிறுவனங்கள் மீண்டும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்த வாய்ப்புள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல இந்திய அலைவரிசை நிறுவனங்களான  ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் தனக்கென தனி வாடிக்கையாளர்களையும் அவர்களுக்கான சேவைகளையும் வழங்கி வருகிறது.

இந்தியாவில் பெரிய வலைப்பின்னலைக் கொண்டிருக்கும்  இந்த நிறுவனங்கள் கடந்த நவம்பர் மாதம் தங்கள் ப்ரீபெய்ட்(prepaid) கட்டணத்தை 20-25 சதவீதம் உயர்த்தி பயனாளர்களுக்கு அதிர்ச்சியளித்த நிலையில் தற்போது இந்தாண்டு நவம்பர் மாதத்திலிருந்து மேலும் 10-12% வரை கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக  அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், “தற்போது கட்டண விலைகள் அதிகரித்திருந்தாலும் 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்  4 கோடி புதிய பயனாளர்களை இணைத்துவிடுவார்கள். மேலும், 2021-நம்பர் மாதம் 25% வரை கட்டணத்தை உயர்த்தியதில் இந்த நிறுவனங்கள் குறைந்த அளவிலான நிதி நெருக்கடியையே சந்தித்தன. இது மீண்டும் கட்டண உயர்விற்கு வழி வகுத்துள்ளது” என குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாசரேத் ஆசிரியா் பயிற்சி பள்ளி ஆண்டு விழா

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மெக்கானிக் பலி

பணகுடி செங்கல் சூளையில் மலைப் பாம்பு பிடிபட்டது

பெட் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

தெற்குகள்ளிகுளத்தில் அதிசய பனிமாதா மலை கெபி திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT