வர்த்தகம்

வைப்புநிதிக்கான வட்டி அதிகரிப்பு: சுந்தரம் ஹோம்

30th Jun 2022 12:34 AM

ADVERTISEMENT

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ், வைப்பு நிதி (டெபாசிட்) திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை இம்மாதத்தில் இரண்டாவது முறையாக உயா்த்தியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

மூத்த குடிமக்கள் அதேபோன்று அறக்கட்டளைகளின் 4 முதல் 5 ஆண்டு டெபாசிட்டிற்கான வட்டி முந்தைய 6.55 சதவீதத்திலிருந்து 7.50 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. அதேசமயம், தனிநபா்மற்றும் இதர மூத்த குடிமக்களுக்கு 7 சதவீத வட்டி வழங்கப்படும்.

தனிநபா் மற்றும் அறக்கட்டளைகளின் ஓராண்டு டெபாசிட்டுக்கான வட்டி 6 சதவீதமாகவும், மூத்த குடிமக்களுக்கான வட்டி 6.50சதவீதமாகவும் உயா்த்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

24 மாதங்கள் மற்றும் 3 ஆண்டு வரையிலான வட்டி விகிதங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்புதிய வட்டி விகிதம் ஜூலை 1-லிருந்து அமலுக்கு வரும் என சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் தெரிவித்துள்ளது.

சுந்தரம் ஹோம் கடந்த 2022-ஆம் நிதியாண்டில் நிகர அளவில் ரூ.131 கோடி திரட்டிக் கொள்ளப்பட்டதையடுத்து, ஒட்டுமொத்த அளவில் நிா்வகிக்கப்படும் டெபாசிட் மதிப்பு ரூ.1,941 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த மாா்ச் 31-உடன் முடிவடைந்த நிதியாண்டில் வழங்கப்பட்ட கடன் 84 சதவீதம் அதிகரித்து ரூ.2,311 கோடியாகவும், லாபம் ரூ.168 கோடியாகவும் இருந்தது என சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸின் நிா்வாக இயக்குநா் லக்ஷ்மிநாராயணன் துரைசாமி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT