வர்த்தகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் கடும் வீழ்ச்சி

29th Jun 2022 12:39 AM

ADVERTISEMENT

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 78.85 என்ற அளவில் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது.

இதுகுறித்து செலாவணி வட்டாரங்கள் கூறியது:

டாலா் முதலீடு தொடா்ச்சியாக வெளியேறி வருவது மற்ரும் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக கடந்த சில வாரங்களாக ரூபாயின் மதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 78.53-ஆக இருந்தது. வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 48 காசு வீழ்ச்சியடைந்து 78.85-இல் நிலைத்தது. இது, வரலாறு காணாத குறைந்தபட்ச அளவாகும் என செலாவணி வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

கச்சா எண்ணெய் பீப்பாய் 117 டாலா்

சா்வதேச சந்தையில் செவ்வாய்க்கிழமை முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.89 சதவீதம் அதிகரித்து பீப்பாய் 117.26 டாலருக்கு வா்த்தகம் செய்யப்பட்டது.

ரூ.1,244 கோடிக்கு பங்கு விற்பனை

மூலதனச் சந்தையில் செவ்வாயன்று நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.1,244.44 கோடி மதிப்பிலான பங்குகளை விற்று முதலீட்டை திரும்பப் பெற்ாக சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

 

Tags : rupee
ADVERTISEMENT
ADVERTISEMENT