வர்த்தகம்

அசத்தலான அம்சங்களுடன் ‘போகோ எஃப் 4 - 5ஜி’ ஸ்மார்ட்போன் அறிமுகம்

DIN

ஸியோமி நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான  ‘போகோ எஃப்4 5ஜி’ ஸ்மார்ட்போனை இன்று மாலை அறிமுகப்படுத்துகிறது.

‘5ஜி’ தொழிநுட்பத் தரத்தில் வெளியாகும் ‘போகோ எஃப்4 5ஜி’ ஸ்மார்ட்போன் அசத்தலான  அம்சங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்று மாலை அந்நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தில் இதன் அறிமுகம் நடைபெறுகிறது.

‘போகோ எஃப்4 5ஜி’ சிறப்பம்சங்கள் :

* 6.67 இன்ச் அளவுகொண்ட  அமோல்ட் எச்டி திரை 

* ஸ்னாப்டிராகன் 870 புராசசர்

* 12ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி

* பின்பக்கம் 64எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும், 8 எம்பி விரிவான கோணத்திற்கும், 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க செல்ஃபி கேமரா 20 எம்பி.

* 4500 எம்ஏஎச்  பேட்டரி வசதி 

* டைப்-சி போர்ட் 

* 67 வாட்ஸ் வேகமான சார்ஜ் வசதி

இந்தியாவில் இதன் விற்பனை விலை ரூ.30,000-க்குள் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT