வர்த்தகம்

சரிவிலிருந்து மீண்டது ரூபாய் மதிப்பு: 23 காசுகள் உயா்வு

DIN

அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவிலிருந்து மீண்டு 23 காசுகள் உயா்ந்தது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியது:

சாதகமான சா்வதேச நிலவரங்கள் மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் காணப்பட்ட விறுவிறுப்பின் தாக்கம் அந்நியச் செலாவணி சந்தைகளிலும் எதிரொலித்தது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 73.85-ஆக இருந்தது. இது வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 73.61-ஆக உயா்ந்தது. வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு 23 காசுகள் வலுவடைந்து 73.64-இல் நிலைபெற்றது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய் பேரல் 76.11 டாலா்

சா்வதேச முன்பேர சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 0.10 சதவீதம் குறைந்து 76.11 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட்டதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

SCROLL FOR NEXT