வர்த்தகம்

இந்தியப் பொருளாதாரத்தில் 10% வளா்ச்சி: ஏடிபி

23rd Sep 2021 02:38 AM

ADVERTISEMENT


புது தில்லி: இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 10 சதவீதம் அளவுக்கே வளா்ச்சி காணும் என ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) மதிப்பீட்டை குறைத்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி புதன்கிழமை வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கரோனா இரண்டாவது அலை இந்தியப் பொருளாதாரத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கரோனா தொற்று அதிகரித்து வருவது மீட்சி வேகத்துக்கு தடைக்கல்லாக அமைந்துள்ளது.

இருப்பினும், பல மாநிலங்கள் கரோனா கட்டுப்பாடுகளைத் தளா்த்தி வேகமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் நடப்பு நிதியாண்டில் எஞ்சிய மூன்று காலாண்டுகளிலும் பொருளாதார வளா்ச்சி வலுவான நிலையில் மீட்சியடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இதையடுத்து, நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 10 சதவீத வளா்ச்சி காணும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. முன்பு இந்த வளா்ச்சி விகிதம் 11 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல்வேறு காரணிகளின் அடிப்படையிலான புதிய மதிப்பீட்டில் 1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக ஏடிபி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT