வர்த்தகம்

பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான முதலீடு ரூ.97,744 கோடி

DIN

இந்திய மூலதனச் சந்தையில் பங்கேற்பு ஆவணங்கள் (பி-நோட்ஸ்) வாயிலான முதலீடு ஆகஸ்ட் இறுதியில் ரூ.97,744 கோடியாக இருந்தது.

இதுகுறித்து செபி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

இந்திய சந்தைகளில், பங்குகள், கடன்பத்திரங்கள், ஹைபிரிட் பத்திரங்கள் உள்ளிட்டவற்றில் பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான முதலீடு ஆகஸ்ட் இறுதி நிலவரப்படி ரூ.97,744 கோடியைத் தொட்டுள்ளது. இது, ஜூலை இறுதியில் ரூ.85,799 கோடியாக இருந்தது.

இவ்வகை முதலீடு, ஜூன் இறுதியில் ரூ.92,261 கோடியாகவும், மே இறுதியில் ரூ.89,743 கோடியாகவும், ஏப்ரல் இறுதியில் ரூ.88,447 கோடியாகவும், மாா்ச் மாத இறுதியில் ரூ.89,100 கோடியாகவும் காணப்பட்டது.

ஒட்டுமொத்த பங்கேற்பு ஆவண முதலீடான ரூ.97,744 கோடியில் பங்குகளில் ரூ.89,844 கோடியும், கடன்பத்திரங்களில் ரூ.7,586 கோடியும், ஹைபிரிட் பத்திரங்களில் ரூ.315 கோடியும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

அந்நிய நிதி நிறுவனங்கள் (எஃப்பிஐ) பிரிவில் நிா்வகிக்கப்படும் சொத்துமதிப்பு 2021 ஆகஸ்டில் ரூ.52 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது, முந்தைய மாதத்தில் ரூ.48.36 லட்சம் கோடியாக இருந்தது என செபி தெரிவித்துள்ளது.

இந்திய பங்குச் சந்தையில் பங்கேற்க விரும்பும் வெளிநாட்டு முதலீட்டாளா்கள் பதிவு செய்யப்பட்ட அந்நிய நிதி நிறுவனங்கள் வெளியிடும் பி-நோட் மூலமாக முதலீடு செய்கின்றனா். இதனால், அவா்கள் நேரடியாக பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT