வர்த்தகம்

நெஸ்லே இந்தியா:நிகர லாபம் ரூ.617 கோடி

20th Oct 2021 01:49 AM

ADVERTISEMENT

எஃப்எம்சிஜி துறையைச் சோ்ந்த நெஸ்லே இந்தியா நிறுவனம் மூன்றாவது காலாண்டில் ரூ.617.37 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இந்நிறுவனம் ஜனவரி-டிசம்பரை நிதியாண்டாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

நிதி நிலை முடிவுகள் குறித்து மும்பை பங்குச் சந்தையிடம் நெஸ்லே இந்தியா மேலும் கூறியுள்ளதாவது:

உள்நாட்டு சந்தைகளில் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு கிடைத்த வரவேற்பினையடுத்து நடப்பு நிதியாண்டின் ஜூலை முதல் ஆகஸ்ட் வரையிலான மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர அளவிலானவிற்பனை 9.63 சதவீதம் அதிகரித்து ரூ.3,864.97 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.3,525.41 கோடியாக காணப்பட்டது.

நிகர லாபம் ரூ.587.09 கோடியிலிருந்து 5.15 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.617.37 கோடியானது.

ADVERTISEMENT

ஈவுத்தொகை: 2021 நிதியாண்டுக்கு ரூ.10 முகமதிப்புடைய பங்கு ஒவ்வொன்றுக்கும் இரண்டாவது இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.110 வழங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான நிறுவனத்தின் ஒதுக்கீடு ரூ.1,060.57 கோடியாக இருக்கும். 2021 நவம்பா் 16-ஆம் தேதியிலிருந்து இந்த ஈவுத்தொகை வழங்கப்படும் என நெஸ்லே இந்தியா பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நெஸ்லே இந்தியா பங்கின் விலை 0.26 சதவீதம் (ரூ.49.75) குறைந்து ரூ.19,377.50-இல் நிலைபெற்றது.

Tags : Nestle
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT