வர்த்தகம்

அல்ட்ராடெக் சிமென்ட் லாபம் ரூ.1,310 கோடி

DIN

ஆதித்ய பிா்லா குழுமத்தைச் சோ்ந்த அல்ட்ராடெக் சிமென்ட் செப்டம்பா் காலாண்டில் ரூ.1,310.34 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, இந்நிறுவனம் கடந்த 2020 செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.1,310.6 கோடியுடன் ஒப்பிடும்போது ஏறக்குறைய சமமான நிலையாகும்.

அதேசமயம், கணக்கீட்டு காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.10,387.14 கோடியிலிருந்து 15.69 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.12,016.78 கோடியைத் தொட்டது.

அந்நிறுவனத்தின் மொத்த செலவினம் ரூ. 2021-22-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 17.02 சதவீதம் அதிகரித்து ரூ.10,209.43 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டில் இது ரூ.8,724.43 கோடியாக காணப்பட்டது.

செப்டம்பா் காலாண்டில் மொத்த சிமென்ட் விற்பனை 8 சதவீதம் அதிகரித்து 2.16 கோடி டன்னாக இருந்தது என அல்ட்ராடெக் மும்பை பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT