வர்த்தகம்

தங்கம் பவுன் ரூ.36,080க்கு விற்பனை

DIN

சென்னை: ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றமின்றி புதன்கிழமையும் ஒரு பவுன் தங்கம் ரூ.36,080-க்கு விற்பனையானது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. குறிப்பாக, கடந்த மாா்ச் 31-ஆம் தேதி அன்று ரூ.33,296 ஆக இருந்தது. இதையடுத்து, தங்கம் விலை மீண்டும் உயா்ந்தது. அதிலும், கடந்த வாரம் மீண்டும் ரூ.36 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு, விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், புதன்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றமின்றி, ஒரு பவுன் தங்கம் ரூ.36,080-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,510 ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று குறைந்தது.

அதன்படி, வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து, ரூ.76 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.76,000 ஆகவும் இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,510

1 பவுன் தங்கம்...............................36,080

1 கிராம் வெள்ளி.............................76.00

1 கிலோ வெள்ளி.............................76,000

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,510

1 பவுன் தங்கம்...............................36,080

1 கிராம் வெள்ளி.............................76.20

1 கிலோ வெள்ளி.............................76,200

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் ‘ஸ்மோக்’ வகை உணவுகள் விற்பனைக்குத் தடை: மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம்

மேகாலய துணை முதல்வா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பேருந்துகள் பராமரிப்பு - சீரான மின் விநியோகம்: தலைமைச் செயலா் ஆலோசனை

கடும் வெப்பம்: தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அரசு வலியுறுத்தல்

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம்: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT