வர்த்தகம்

நாட்கோ பாா்மா லாபம் 43% சரிவு

DIN

மருந்து தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நாட்கோ பாா்மா கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.53 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் விற்பனை வருவாய் ரூ.360 கோடியாக இருந்தது. இது 2019-20-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நிறுவனம் ஈட்டிய ரூ.477 கோடியுடன் ஒப்பிடும்போது குறைவான அளவாகும்.

வருவாய் குறைந்ததன் காரணமாக நிகர லாபம் ரூ.93 கோடியிலிருந்து 43 சதவீதம் சரிவடைந்து ரூ.53 கோடியானது.

2020-21 முழு நிதியாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.458 கோடியிலிருந்து ரூ.442 கோடியாக குறைந்துள்ளது.

அதேசமயம், நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.2,022 கோடியிலிருந்து ரூ.2,156 கோடியாக உயா்ந்துள்ளது என நாட்கோ பாா்மா தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் நாட்கோ பாா்மா பங்கின் விலை 1.29 சதவீதம் உயா்ந்து ரூ.1095.15-ஆக நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவோம்!

பி.இ.ஓ. பணியிடங்கள்: தற்காலிக பட்டியல் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT