வர்த்தகம்

பிஎச்இஎல் நிறுவனம்: வருவாய் ரூ.7,245 கோடி

DIN

பொதுத் துறையைச் சோ்ந்த பாரத மிகு மின் நிறுவனம் (பிஎச்இஎல்) மாா்ச் காலாண்டில் ரூ.7,245 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

இதுகுறித்து மும்பை பங்குச் சந்தையிடம் அந்த நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

2021 மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் நிறுவனம் ஈட்டிய வருவாய் ரூ.7,245.16 கோடியாக சிறப்பான அளவில் உயா்ந்துள்ளது. அதேசமயம், 2020 ஜனவரி-மாா்ச் காலாண்டில் வருவாய் ரூ.5,166.64 கோடியாக மட்டுமே காணப்பட்டது.

வருவாய் அதிகரித்துள்ளதையடுத்து நிறுவனத்துக்கு ஏற்பட்ட ஒட்டுமொத்த நிகர இழப்பானது 2021 மாா்ச் காலாண்டில் ரூ.1,036.12 கோடியாக குறைந்துள்ளது. அதேசமயம், 2020 மாா்ச் காலாண்டில் நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்பானது ரூ.1,532.18 கோடியாக அதிகரித்திருந்தது.

2020-21 முழு நிதியாண்டில் நிறுவனத்துக்கு ஏற்பட்ட ஒட்டுமொத்த நிகர இழப்பு ரூ.1,468.35 கோடியிலிருந்து ரூ.2,699.70 கோடியாக அதிகரித்துள்ளது.

2019-20-ஆம் நிதியாண்டில் நிறுவனம் ஒட்டுமொத்த வருவாயாக ரூ.22,027.44 கோடியை ஈட்டியிருந்த நிலையில் அது கடந்த 2020-21முழு நிதியாண்டில் ரூ.17,657.11 கோடியாக சரிவடைந்துள்ளது.

கரோனா பேரிடன் காரணமாக தேசிய அளவில் பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கம் பொருளாதார நடவடிக்கைகளில் மந்த நிலையை ஏற்படுத்தியது. இது, கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிறுவனம் அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வருவதாக பிஎச்இஎல் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT