வர்த்தகம்

புதிய பங்கு வெளியீடு: கிம்ஸ் பங்கின் விலை ரூ.825-ஆக நிா்ணயம்

DIN

புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கவுள்ள கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் (கிம்ஸ்) பங்கின் விலை ரூ.825-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிம்ஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

கடன் திரும்பச் செலுத்தல் நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் ரூ.2,144 கோடிக்கான புதிய பங்கு வெளியீடு ஜூன் 16-இல் தொடங்கி 18-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. மூன்று நாள்கள் நடைபெறவுள்ள இந்த புதிய பங்கு வெளியீட்டில் ஓஎஃப்எஸ் முறையில் 2,35,60,538 பங்குகள் வரை விற்பனை செய்யப்படவுள்ளன. பங்கொன்றின் விலை ரூ.815-825-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மொத்த பங்கு வெளியீட்டில் 75 சதவீதம் தகுதிவாய்ந்த நிதி நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 15 சதவீதம் நிறுவனம் சாரா முதலீட்டாளா்களுக்கும், 10 சதவீத பங்குகள் சில்லறை முதலீட்டாளா்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கிம்ஸ் தெரிவித்துள்ளது.

டோட்லா புதிய பங்கு வெளியீடு: அதேபோன்று, பால் பொருள்கள் வா்த்தகத்தில் ஈடுபட்டு வரும் டோட்லா டயரி பங்கு வெளியீடும் ஜூன் 16-இல் தொடங்கி 18-இல் நிறைவடையவுள்ளது. இப்புதிய பங்கு வெளியீட்டில் வெளியிடப்படும் பங்குகளின் விலை ரூ.421-428-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் மூலம் இந்நிறுவனம் ரூ.520.17 கோடியை திரட்டிக் கொள்ளும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT