வர்த்தகம்

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் லாபம் ரூ.40 கோடி

DIN

வங்கி சாரா நிதி நிறுவனமான சுந்தரம் ஃபைனான்ஸின் துணை நிறுவனமான சுந்தரம் ஹோம் ஹோம் ஃபைனான்ஸ் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.40.04 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

2021 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ரூ.40.04 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.33.94 கோடியாக காணப்பட்டது.

கணக்கீட்டு காலாண்டில் நிறுவனம் வழங்கிய கடன்களின் மதிப்பு ரூ.99.98 கோடியிலிருந்து ரூ.249.27 கோடியாக அதிகரித்துள்ளது.

வளா்ச்சி திட்டங்களுக்காக நடப்பாண்டில் ரூ.2,500 கோடியை திரட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடன்பத்திரம் மற்றும் வங்கி நிதி உதவி மூலமாக இந்த கடன் திரட்டப்படும் என சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT