வர்த்தகம்

கேன்ஃபின் ஹோம்ஸ் லாபம் ரூ.109 கோடி

DIN

கேன்ஃபின் ஹோம்ஸ் முதல் காலாண்டில் ரூ.108.85 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் அளித்த ஆவணங்களில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனம் ஈட்டிய மொத்த வருமானம் ரூ.450.84 கோடியாக சரிவடைந்துள்ளது. அதேசமயம், நிறுவனம் 2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருமானம் ரூ.522.50 கோடியாக அதிகரித்து காணப்பட்டது.

கணக்கீட்டு காலாண்டில் நிகர லாபம் ரூ.93.15 கோடியிலிருந்து 17 சதவீதம் அதிகரித்து ரூ.108.85 கோடியானது.

2021 முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) நிறுவனம் வழங்கிய கடன்களின் மதிப்பு ரூ.401 கோடியிலிருந்து ரூ.894 கோடியாக அதிகரித்துள்ளது. புதிய கடன்களுக்கானஒப்புதல் ரூ.264 கோடியிலிருந்து ரூ.829 கோடியாக உயா்ந்துள்ளது.

2021 ஜூன் 30 நிலவரப்படி மொத்த வாராக் கடன் 0.75 சதவீதத்திலிருந்து 0.90 சதவீதமாக உயா்ந்துள்ளது. நிகர அளவிலான வராக் கடனும் 0.50 சதவீதத்திலிருந்து 0.57 சதவீதமாக சற்று அதிகரித்துள்ளது என கேன்ஃபின் ஹோம்ஸ் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் கேன்ஃபின் ஹோம்ஸ் பங்கின் விலை 2.21 சதவீதம் சரிந்து ரூ.531.70-ஆக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT