வர்த்தகம்

இந்தியாவில் வெளியாகும் ' ரியல் மீ புக் ' மடிக்கணினி

23rd Jul 2021 01:21 PM

ADVERTISEMENT

 ஸ்மார்ட்போன் தயாரிப்பில் தனக்கென தனி வாடிக்கையாளர்களை வைத்திருக்கிற 'ரியல் மீ ' நிறுவனம் அடுத்ததாக மடிக்கணினியை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வந்த நிலையில் தற்போது அதன் புதிய மடிக்கணினியின் விற்பனையை அடுத்த மாதம்  இந்தியாவில் தொடங்க உள்ளது. 

' ரியல் மீ புக் ' என பெயர் வைக்கப்பட்டிருக்கிற இந்த மடிக்கணினி  நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கியிருக்கிறது. 14 இன்ச் திரையுடன் நவீன ஆடியோ வசதிகளுடன் வெளியாக இருக்கும் இந்த மடிக்கணினியை  குறைந்த விலையில் வழங்கவும் முடிவு செய்திருப்பதாக ரியல் மீ நிறுவனம் தெரிவித்திருக்கிறார்கள்.

கடந்த மாதம்  ஐரோப்பாவில்  ஜிடி(GT ) 5ஜி  ரியல் மீ  ஸ்மார்ட்போன் வெளியீட்டின்  போது இந்த மடிக்கணினிக்கான பரிசோதனையும் முடிந்ததாக தெரிவித்தனர். 

மேலும் வெளியானத்  தகவலின் படி , ரியல் மீ புக் மடிக்கணினியின் திரை 14 இன்ச் அளவில்  FHD LED தொழில்நுட்பத்தில்  கண்களை கூசாத வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் ,  11 ஜெனெரேஷன் இன்டெல் கோர் ஐ -3 ( 11 gen intel core i 3) , இன்டெல் கோர் - ஐ 5 சிபியு ( intel core -i 5 CPU )  உடன்  3.5 m.m ஆடியோ ஜாக் மற்றும் 2 யுஎஸ்பி போர்ட்களுடன்  இந்தியாவில் அடுத்த மாதம் விற்பனைக்கு வர உள்ளது.

ADVERTISEMENT

தன்னுடைய  தொழில்நுட்ப பிராண்டான டிஸோ போன்ற புதிய நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளில் வேகமாக முன்னேறி வரும் ரியல் மீ , 5 ஜி ஸ்மார்ட்போன்களை அடுத்த ஆண்டு இந்திய பயனர்களுக்கு ரூ.10,000  விலைக்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதையும் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த வருடத் தொடக்கத்தில் இந்தியாவில்  புதிதாக  ஆறு 5ஜி ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட அந்நிறுவனம் அதன்  அடிப்படை  விலைகளை ரூ.15,000லிருந்து ஆரம்பித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது . 

Tags : laptop real me
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT