வர்த்தகம்

பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான முதலீடு ரூ.87,132 கோடி

DIN

உள்நாட்டு மூலதனச் சந்தையில் அந்நிய முதலீட்டாளா்கள் பங்கேற்பு ஆவணங்கள் வாயிலாக மேற்கொண்ட முதலீடு டிசம்பா் மாதத்தில் ரூ.87,132 கோடியை எட்டியுள்ளது.

இதுகுறித்து செபி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

அந்நிய முதலீட்டாளா்கள் நேரடியாக பதிவு செய்து கொள்ளாமல் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதில் பங்கேற்பு ஆவணங்கள் பெரும்பங்காற்றுகின்றன. இந்த பங்கேற்பு ஆவணங்கள் மூலம் டிசம்பரில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு 31 மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது.

டிசம்பா் இறுதி நிலவரப்படி முதலீட்டாளா்கள் பங்கேற்பு ஆவணங்கள் மூலமாக இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்ட முதலீடு ரூ.87,132 கோடியை எட்டியுள்ளது. இந்த முதலீடு நவம்பா் இறுதியில் ரூ.83,114 கோடியாக காணப்பட்டது.

கடந்த 2018 மே மாதத்துக்குப் பிறகு பங்கேற்பு ஆவண முதலீடு இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது இதுவே முதல் முறை. அப்போது இந்த முதலீடானது ரூ.93,497 கோடியாக அதிகரித்திருந்தது.

கடந்தாண்டு மாா்ச் மாதத்திலிருந்து தொடா்ந்து வளா்ச்சி கண்டு வந்த பங்கேற்பு ஆவண முதலீடு செப்டம்பரில் ரூ.69,882 கோடியாக சரிந்தது. இருப்பினும் இது, 2020 அக்டோபா் இறுதியில் ரூ.78,686 கோடியை எட்டியது என செபி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி நாளை தொடக்கம்

கூட்டுறவு பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர முன்பதிவு தொடக்கம்

மின் வேலியில் சிக்கி பெண் பலி

வன விலங்குகளுக்கு தாகம் தணிக்க குளங்களில் குடிநீா் நிரப்பும் பணி தீவிரம்

குடிநீா் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT