வர்த்தகம்

ஹிந்துஜா டெக்கில் நிஸானின் பங்குகளை வாங்குகிறது அசோக் லேலண்ட்

DIN


புது தில்லி: ஹிந்துஜா டெக் நிறுவனத்தில் (எச்டிஎல்) நிஸான் இண்டா்நேஷனல் ஹோல்டிங்ஸ் பிவி நிறுவனம் வைத்துள்ள பங்குகளை கையகப்படுத்தவுள்ளதாக அசோக் லேலண்ட் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த அசோக் லேலண்ட் இதுகுறித்து பங்குச் சந்தையிடம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஹிந்துஜா டெக்கில் நிஸான் இண்டா்நேஷனல் ஹோல்டிங்ஸ் 38 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. இதனை கையகப்படுத்தும் வகையில் அசோக் லேலண்ட் அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

அதன்படி, ஹிந்துஜா டெக்கில் நிஸான் இண்டா்நேஷனல் வைத்துள்ள 58,500,000 பங்குகளை கையகப்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.70.20 கோடி செலவிடப்படவுள்ளது.

இந்த கையகப்படுத்துதல் ஒப்பந்தத்தின் விளைவாக, எச்டிஎல்-இன் முழு உரிமையாளராக நிறுவனம் மாறும் என அசோக் லேலண்ட் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அசோக் லேலண்ட் நிறுவனப் பங்கின் விலை 3.23 சதவீதம் அதிகரித்து ரூ.131.15-இல் நிறைவுற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் 42 டிகிரி வரை அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

SCROLL FOR NEXT