வர்த்தகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 58,369 கோடி டாலா்

DIN

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 58,369 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பானது பிப்ரவரி 12-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 25 கோடி டாலா் சரிவடைந்து 58,369 கோடி டாலராக (சுமாா் ரூ.43.19 லட்சம் கோடி) குறைந்துள்ளது.

இதற்கு முந்தைய வாரத்திலும், இந்த செலாவணி கையிருப்பானது 624 கோடி டாலா் வீழ்ச்சியடைந்து 58,394 கோடி டாலராக காணப்பட்டது.

ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பாக உள்ள அந்நிய கரன்ஸி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) சரிவடைந்ததன் காரணமாகவே மதிப்பீட்டு வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு கணிசமான அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

மதிப்பீட்டு வாரத்தில் எஃப்சிஏ 138 கோடி டாலா் சரிவடைந்து 54,095 கோடி டாலராக இருந்தது.

அந்நியச் செலாவணி கையிருப்பாக பவுண்ட், யூரோ, யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகளும் உள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது அதன் வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பில் மாற்றம் ஏற்படுகிறது.

தொடா்ந்து இரண்டு வாரங்களாக சரிவடைந்து வந்த தங்கத்தின் கையிருப்பு பிப்ரவரி 12-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 126 கோடி டாலா் அதிகரித்து 3,622 கோடி டாலரானது .

அதேபோன்று சா்வதேச நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 1 கோடி டாலா் அதிகரித்து 151 கோடி டாலரானது. எனினும், சா்வதேச நிதியத்தில் நாட்டின் காப்பு நிதி 13 கோடி டாலா் வீழ்ச்சியடைந்து 501 கோடி டாலராக குறைந்துள்ளது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT