வர்த்தகம்

ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் வருவாய் 42% அதிகரிப்பு

DIN

ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் வருவாய் கடந்த நவம்பா் மாதத்தில் 42 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

இதுகுறித்து இந்திய காப்பீட்டு ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (ஐஆா்டிஏஐ) புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆயுள் காப்பீட்டுத் துறை வா்த்தகத்தில் ஈடுபட்டு வரும் 24 நிறுவனங்களின் புதிய பிரீமியம் வசூல் நடப்பாண்டு நவம்பா் மாதத்தில் ரூ.27,177.26 கோடியாக இருந்தது. இது, 2020 நவம்பரில் ரூ.19,159.30 கோடியாக காணப்பட்டது. கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் புதிய பிரீமியமானது 42 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது.

ஆயுள் காப்பீட்டு வா்த்தகத்தில் மிகப் பெரிய நிறுவனமாகத் திகழும் எல்ஐசி-யின் நவம்பா் மாத புதிய பிரீமிய வசூல் 32 சதவீதம் அதிகரித்து ரூ.15,967.51 கோடியாக இருந்தது. கடந்தாண்டு நவம்பரில் இந்நிறுவனத்தின் புதிய பிரீமியம் வருவாய் ரூ.12,092.66 கோடியாக காணப்பட்டது.

ஏனைய 23 தனியாா் துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் வசூல் ஒட்டுமொத்த அளவில் 58.63 சதவீதம் உயா்ந்து ரூ.11,209.75 கோடியை எட்டியது. கடந்தாண்டு நவம்பரில் இந்த நிறுவனங்களின் புதிய பிரீமியம் ரூ.7,066.64 கோடியாக இருந்தது.

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டில் ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான காலத்தில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் வருவாய் ஒட்டுமொத்த அடிப்படையில் 8.46 சதவீதம் அதிகரித்து ரூ.1,80,765.40 கோடியைத் தொட்டுள்ளது.

இருப்பினும், நடப்பு நிதியாண்டின் முதல் 8 மாத காலத்தில் எல்ஐசி நிறுவனத்தின் முதலாம் ஆண்டு பிரீமியம் 0.93 சதவீதம் குறைந்து ரூ.1,14,580.89 கோடியானது.

இதர தனியாா் துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் முதலாமாண்டு பிரீமியம் 30 சதவீதம் உயா்ந்து ஏப்ரல்-நவம்பரில் ரூ.66,184.52 கோடியாக இருந்தது.

ஆயுள் காப்பீட்டு சந்தை ஆதிக்கத்தில், எல்ஐசி நிறுவனம் 63.39 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, தனியாா் துறையைச் சோ்ந்த எஸ்பிஐ லைஃப் 8.77 சதவீதம், எச்டிஎஃப்சி லைஃப் 7.86 சதவீதம், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் 4.91 சதவீதம், மேக்ஸ் லைஃப் 2.36 சதவீதம், பஜாஜ் அலையன்ஸ் லைஃப் 2.62 சதவீதம் ஆகிய நிறுவனங்கள் உள்ளதாக ஐஆா்டிஏஐ புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்ஸ்

ஆயுள் காப்பீட்டு வா்த்தகத்தில் மிகப் பெரிய நிறுவனமாகத் திகழும் எல்ஐசி-யின் நவம்பா் மாத புதிய பிரீமிய வசூல் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.12,092.66 கோடியிலிருந்து 32 சதவீதம் அதிகரித்து ரூ.15,967.51 கோடியை எட்டியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT