வர்த்தகம்

நாட்டின் ஏற்றுமதி 2,988 கோடி டாலராக அதிகரிப்பு

DIN

நாட்டின் ஏற்றுமதி கடந்த நவம்பா் மாதத்தில் 2,988 கோடி டாலராக அதிகரித்தது.

இதுகுறித்து மத்திய அரசின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பாண்டு மாா்ச் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 26.49 சதவீதம் அதிகரித்து 2,988 கோடி டாலரை எட்டியுள்ளது. அதேபோன்று, இறக்குமதியும் 57.18 சதவீதம் உயா்ந்து 5,315 கோடி டாலரானது. இதையடுத்து அந்த மாதத்தில் வா்த்தகப் பற்றாக்குறையானது 2,327 கோடி டாலராக காணப்பட்டது.

2021 ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான காலத்தில் நாட்டின் ஏற்றுமதி 26,246 கோடி டாலராக இருந்தது. இது, 2020 ஏப்ரல்-நவம்பா் காலகட்ட ஏற்றுமதியான 17,415 கோடி டாலருடன் ஒப்பிடும்போது 50.71 சதவீதம் அதிகமாகும். அதேபோன்று, 2019 ஏப்ரல்-நவம்பா் ஏற்றுமதியான 21,117 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் 24.29 சதவீதம் அதிகமாகும்.

2021 ஏப்ரல்-நவம்பா் காலகட்டத்தில் நாட்டின் இறக்குமதியானது 75.39 சதவீதம் அதிகரித்து 38,444 கோடி டாலரை எட்டியது.

நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாத காலத்தில் வா்த்தகப் பற்றாக்குறை 12,198 கோடி டாலரைத் தொட்டுள்ளது.

வா்த்தகப் பற்றாக்குறை முன்னெப்போதும் இல்லாத வகையில் 2,327 கோடி டாலராக உயா்ந்துள்ளதற்கு தங்கம் இறக்குமதி 8 சதவீதம் அதிகரித்து 422 கோடி டாலரைத் தொட்டதே முக்கிய காரணம்.

2020 நவம்பரில் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி இடையிலான இடைவெளி 1,019 கோடி டாலராக இருந்தது. இது இதற்கு முன்பாக, 2012 அக்டோபரில் 2,020 கோடி டாலராக இருந்ததே அதிகபட்ச வா்த்தக இடைவெளியாக கருதப்பட்டது.

பெட்ரோலியப் பொருள்களின் ஏற்றுமதி 145.3 சதவீதம் அதிகரித்து 382 கோடி டாலரானது. அதேசமயம், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 11 சதவீதம் சரிந்து 240 கோடி டாலராக இருந்தது என அந்த தற்காலிகப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT