வர்த்தகம்

இரண்டு மடிக்கணினிகளை அறிமுகப்படுத்தும் ' ரெட்மி ' நிறுவனம் 

DIN

மின்னணு  தொழில்நுட்பத்தில் வளர்ந்து வருகிற பல நிறுவனங்கள் அடுத்ததடுத்த புரட்சிகளை செய்துகொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில் ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென தனி அடையாளத்துடன் இருக்கும் ரெட்மி நிறுவனம் தன்னுடைய புதிய இரண்டு மடிக்கணினிகளை இந்தியாவில்  அறிமுகப்படுத்த இருக்கிறது .

ரெட்மி புக் ப்ரோ மற்றும் ரெட்மி புக் இ - லேர்னிங் எடிசன் எனப் பெயரிடப்பட்டுள்ள இரண்டு மடிக்கணினிகளை இந்திய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது.

ரெட்மிபுக் ப்ரோ  மற்றும் ரெட்மி புக் இ -லேர்னிங் மடிக்கணினிகளின் விலைகளின் முறையே ரூ. 49, 990 ஆகவும் ரூ. 41,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது . சற்று கூடுதலான  512 ஜிபி சேமிப்பு அளவுள்ளவை ரூ. 44,999 என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் எம்.ஐ இந்தியா  நிறுவனத்தின் இந்திய தலைமை நிர்வாக  அதிகாரி ரகு ரெட்டி " மிகச்சிறந்த வடிவமைப்பில் உருவாகியிருக்கும் இந்த மடிக்கணினிகள் 11 வது ஜெனரேஷன் இன்டெல் கோர் செயலியையும் , கச்சிதமான அமைப்புகள் மற்றும்  அதி  வேகத்துடன் செயல்படும் திறனைக் கொண்டிருக்கிறது என்றும் கணினியை உருவாகும் போது நாங்கள் அடைந்த மகிழ்ச்சியையும் பரவசத்தையும் இதை வாங்கும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக அனுபவிப்பார்கள் " என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் 19.9 மி.மீ  மெல்லிசான அளவைக் கொண்ட  மடிக்கணினியான இவை 1.8 கிலோ எடையுடன் உலோக பூச்சால் சாம்பல் நிறங்களில் 15.6 எச்டி   திரையுடன்  உருவாக்கப்பட்டிருக்கிறது. 

கணினியை உபயோகப்படுத்தும்  போது அறை வெளிச்சமோ அல்லது விளக்கு வெளிச்சமோ  பாதிக்காத வண்ணமும் ,  கண்களை பாதிக்காத வகையிலும் கணினியின் திரை  உருவாக்கப்பட்டிருக்கிறது.

ரெட்மி புக்  720பி.எச்டி  ஒருங்கிணைந்த கேமரா மற்றும் இரட்டை மைக்ரோஃபோன் அமைப்பைக் கொண்டுள்ளது. இது சமீபத்திய 11 வது ஜெனரேஷன்  டைகர்லேக் இன்டெல் கோர் ஐ 5 எச் 35 தொடர் செயலிகளில் ஒன்றாகும்.

65வாட்ஸ்  சார்ஜர் மூலம், பயனர்கள் 35 நிமிடங்களுக்குள் தங்கள் நோட்புக்கை 0 முதல் 50 சதவிகிதம் வரை அதிகரிக்க முடியும் என்றும்  நிறுவனம் கூறியுள்ளது.

ரெட்மி புக் இ-லேர்னிங்  மடிக்கணினி கற்றல் ஆர்வம் கொண்டவர்களுக்காக  சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது . பள்ளி , கல்லூரிகளுக்குச்  செல்லும் மாணவர்கள், அலுவலகத்திற்குச் செல்லும் தொழிலாளர்கள் அனைவருக்கும் உபயோகப்படும் வகையில்  720 பி.எச்டி  வெப் கேமராவாவுடன் அதே கவர்ச்சிகரமான வடிவமைப்பைக் கொண்டிருக்கும் ரெட்மி புக் இ - லேர்னிங் சமீபத்திய 11 வது ஜெனரேஷன்  டைகர் லேக் இன்டெல் கோர் ஐ 3  செயலிகளில் ஒன்று . 1115ஜி4 வேகத்தில்  4.1 ஹெர்ட்ஸ் இருப்பதால் தடையற்ற  செயல்திறனை உறுதி செய்கிறது.

மேலும், இது 8 ஜிபி ராம்-உடன்  , 3200 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி வரை தாங்கும் ரோம் சேமிப்பு அமைப்பைக்  கொண்டு  செயல்படுகிறது . 

இரண்டு மடிக்கணினிகளும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் எம்ஐ .காம் , எம்.ஐ.ஹோம்ஸ்   மற்றும் பிளிப்கார்ட்டில்  விற்பனைக்குக் கிடைக்கும்  என தெரிவித்திருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT