வர்த்தகம்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 18 காசுகள் சரிவு

DIN



மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 18 காசுகள் சரிவடைந்து 73.79 - ஆனது. 

இதுகுறித்து வர்த்தகர்கள் கூறியதாவது:
பங்குச் சந்தைகளில் நடைபெற்ற வர்த்தகத்தில் கணிசமான ஏற்றம் காணப்பட்ட போதிலும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி நிலையைக் கண்டது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பு தொடக்கத்தில் 3 காசுகள் குறைந்து 73.64 - ஆக காணப்பட்டது. 

வர்த்தகத்தின் இடையே இந்த மதிப்பு அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. 
வர்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு முந்தைய வர்த்தக தினத்தைக் காட்டிலும் 18 காசுகள் குறைந்து 73.79 - ஆனது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 73.61 - ஆக காணப்பட்டது என வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

அந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தின்போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிகர அளவில் ரூ.2,080.21 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக பங்குச் சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. 

கச்சா எண்ணெய்: சர்வதேச முன்பேர சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.57 சதவீதம் குறைந்து 41.68 டாலராக காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT