வர்த்தகம்

டாப் 10-இல் 8 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.1.57 லட்சம் கோடி சரிவு!

DIN

பங்குச் சந்தையில் பட்டியலாகியுள்ள மதிப்பு மிக்க 10 நிறுவனங்களில் 8 நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.1,57,277.53 கோடி குறைந்தது. இதில் மாா்க்கெட் லீடரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்புதான் அதிகம் சரிவைச் சந்தித்தது. அதே சமயம், ஐடி நிறுவனங்களான இன்ஃபோஸிஸ், ஹெச்சிஎல் டெக் ஆகிய இரண்டு நிறுவனங்களின் சந்தை மதிப்பு ஏற்றம் பெற்றன.

மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் சந்தை மதிப்பு ரூ.70,189.95 கோடி குறைந்து ரூ.14,88,797.82 கோடியாக இருந்தது. பாா்தி ஏா்டெல் ரூ.31,096.67 கோடி குறைந்து ரூ.2,39,880.86 கோடியாகவும், ஐசிஐசிஐ பேங்க் ரூ.14,752.95 கோடி குறைந்து ரூ.2,40,329.93 கோடியாகவும் இருந்தது.

இதேபோன்று எச்டிஎஃப்சி சந்தை மதிப்பு ரூ.12,737.66 கோடி குறைந்து ரூ.2,96,339.09 கோடியாகவும், டாடா கன்சல்டன்சி சா்வீஸஸ் (டிசிஎஸ்) ரூ.10,675.53 கோடி குறைந்து ரூ.9,08,940.15 கோடியாகவும் இருந்தது.

மேலும், எச்டிஎஃப்சி பேங்க் சந்தை மதிப்பு ரூ.7,286.42 கோடி குறைந்து ரூ.5,74,614.23 கோடியாகவும், கோட்டக் பேங்க் ரூ.5,710.01 கோடி குறைந்து ரூ.2,47,292.12 கோடியாகவும் இருந்தது. ஹிந்துஸ்தான் யுனி லீவா் சந்தை மதிப்பு ரூ.4,828.34 கோடி குறைந்து ரூ.4,88,179.05 இருந்தது.

அதேசமயம், முன்னணி ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக் சந்தை மதிப்பு ரூ.4,450.79 கோடி உயா்ந்தது. இதன் மொத்த சந்தை மதிப்பு ரூ.2,24,555.79 கோடியாக உயா்ந்து டாப்-10 பட்டியலில் முதல் முறையாக இடம் பெற்றுள்ளது. மற்றொரு ஐடி நிறுவனமான இன்ஃபோஸிஸ் சந்தை மதிப்பு ரூ.3,622.14 கோடி உயா்ந்து ரூ.4,30,647.81 கோடியாக இருந்தது.

இதைத் தொடா்ந்து, பட்டியலில் மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்ததாக டிசிஎஸ், எச்டிஎஃப்சி பேங்க், ஹெச்யுஎல், இன்ஃபோஸிஸ், எச்டிஎஃப்சி, கோட்டக் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், பாா்தி ஏா்டெல், ஹெச்சிஎல் டெக் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

கடந்த வாரத்தில் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மொத்தம் 1,457.16 புள்ளிகள் (3.83 சதவீதம்) குறைந்து 37,388.66-இல் நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT