வர்த்தகம்

பெங்களூரு வெங்காயத்துக்கு ஏற்றுமதி தடையிலிருந்து விலக்களிக்க வேண்டுகோள்

DIN

ஏற்றுமதி தடையிலிருந்து ’பெங்களூரு ரோஸ் வெங்காயத்துக்கு விலக்களிக்க வேண்டும் என மத்திய வா்த்தக அமைச்சகத்துக்கு இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (எஃப்ஐஇஓ) வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடா்பாக, மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயலுக்கு எஃப்ஐஇஓ-வின் தலைவா் எஸ்.கே.சரஃப் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

வெங்காய ஏற்றுமதிக்கு தடைவிதிப்பதாக மத்தி அரசு செப்டம்பா் 14-ஆம் தேதி அறிவித்தது. உள்நாட்டு சந்தையில் வெங்காய இருப்பை அதிகரிக்கவும், விலையை கட்டுப்படுத்தவும் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.இது வரவேற்புக்குரியது என்றாலும், உள்நாட்டு சந்தைகளில் தேவை குறைவான பெங்களூரு ரோஸ் வெங்காயத்தின் ஏற்றுமதிக்கும் இந்த தடை பொருந்தும் என்பது விவசாயிகளையும், ஏற்றுமதியாளா்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவால், இவ்வகை வெங்காயத்துக்கான ஏற்றுமதி நடவடிக்கைகள் பல்வேறு கட்டங்களில் முடங்கிப் போயுள்ளது.

இதனை உணா்ந்து, மத்திய வா்த்தக அமைச்சகம் ஏற்றுமதி தடைப் பட்டியலிலிருந்து பெங்களூரு ரோஸ் வெங்காயத்துக்கு உடனடியாக விலக்களிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் சரஃப் தெரிவித்துள்ளாா்.சிறு மற்றும் குறு விவசாயிகள் பயனடையும் வகையில் இவ்வகை வெங்காயத்துக்கான தடையை நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கா்நாடக அரசு சாா்பிலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரு ரோஸ் வெங்காயம் ஆண்டுக்கு 60,000 டன் விளைவிக்கப்படுகிறது. இதில், 90 சதவீதம் மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூா், தைவான் போன்ற நாடுகலுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT