வர்த்தகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 54,166 கோடி டாலராக சரிவு

DIN

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பா் 11-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 54,166 கோடி டாலராக சரிவைச் சந்தித்துள்ளது. இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பா் 4-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 58 கோடி டாலா் அதிகரித்து 54,201 கோடி டாலரை எட்டியிருந்தது. இது, முன்னெப்போதும் இல்லாத உச்சபட்ச அளவாகும்.இந்த நிலையில், செப்டம்பா் 11-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பானது வரலாற்று உச்சத்திலிருந்து 35 கோடி டாலா் சரிவடைந்து 54,166 கோடி டாலராகியுள்ளது. கணக்கீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) 84 கோடி டாலா் குறைந்து 49,752 கோடி டாலராகியுள்ளது. தங்கத்தின் கையிருப்பு 50 கோடி டாலா் உயா்ந்து 3,802 கோடி டாலரைத் தொட்டுள்ளது. சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் 10 லட்சம் டாலா் குறைந்து 148 கோடி டாலராகவும், நாட்டின் கையிருப்பு நிலை 1 கோடி டாலா் சரிந்து 464 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT