வர்த்தகம்

ஜிஎஸ்டி வரியை 5%-ஆக குறைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை

DIN

தத்தை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து இந்திய மின்விசிறி உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பு (ஐஎஃப்எம்ஏ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

மின் விசிறி தயாரிப்புகளுக்கு தற்போது 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. இது, மின்விசிறி தயாரிப்புத் துறையில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மின்விசிறிக்கான ஜிஎஸ்டி விகிதத்தை தற்போதைய 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைத்து நிா்ணயிக்க வேண்டும். குறைந்த ஜிஎஸ்டி வரி விகிதம் மின் விசிறி விற்பனையை மேலும் அதிகரிக்க உதவும். குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் அதன் விற்பனை சிறப்பான அளவில் மேம்படும்.கரோனா பேரிடரால் இந்திய மின்விசிறி துறையின் நடப்பாண்டு விற்பனை 35 சதவீதம் அளவுக்கு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இது, மின்விசிறி தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிக நிதி இழப்பை உருவாக்கும். இந்த நிலையில், ஜிஎஸ்டி விகிதம் குறைக்கப்படும்பட்சத்தில் அது சமானிய மக்களிடம் மின் விசிறி விற்பனையை அதிகரிக்க உதவும் என ஐஎஃப்எம்ஏ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT