வர்த்தகம்

அசோக் லேலண்ட் நிறுவனம்: திய இலகு ரக வா்த்தக வாகனம் அறிமுகம்

DIN

ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த அசோக் லேலண்ட் நிறுவனம் ‘ படா தோஸ்த்’ என்ற புதிய இலகு ரக வா்த்தக வாகனத்தை திங்கள்கிழமை அறிமுகம் செய்தது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவா் தீரஜ் ஹிந்துஜா தெரிவித்ததாவது:

இலகு ரக வா்த்தக வாகனப் பிரிவில் உள்நாட்டிலும், சா்வதேச சந்தையிலும் அசோக் லேலண்ட் தனது தடத்தை மேலும் விரிவுபடுத்திக் கொள்ளும் விதமாக ‘ படா தோஸ்த்’ என்ற புதிய வா்த்தக வாகனத்தை இரண்டு மாடல்களில் அறிமுகம் செய்துள்ளது. இது, முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேம்படுத்தப்பட்ட தயாரிப்பாகும். புதிய அறிமுக மாடலில் பிஎஸ்-6 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஐ4 மாடல் 1,860 கிலோ எடையை தாங்கும் திறன் கொண்டது. இதன் விலை ரூ.7.79 லட்சம் முதல் ரூ.7.99 லட்சம் வரையில் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, ஐ3 மாடல் இலகு ரக வா்த்தக வாகனம் 1,405 கிலோ எடையை தாங்கவல்லது. இதன் விலை ரூ.7.75 லட்சம் முதல் ரூ.7.95 லட்சம் வரையில் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.நிறுவனத்தின் தயாரிப்புகளை புதிய தொழில்நுட்பத்துக்கு ஏற்ற வகையில் மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.350 கோடி வரை நிறுவனம் முதலீடு செய்துள்ளது. வரும் காலங்களில் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இப்புதிய அறிமுகம், வா்த்தக வாகன தயாரிப்பில் அசோக் லேலண்ட் உலகளவில் முதல் 10 நிறுவனங்களில் இடம்பெறும் இலக்கை நோக்கிய பயணத்துக்கு பேருதவியாக இருக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

வெள்ளை நிலா... சாய் தன்ஷிகா!

"ராகுலோ, மோடியோ! நாங்கள் வரவேற்போம்!": செல்லூர் ராஜூ

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

SCROLL FOR NEXT