வர்த்தகம்

காா்களின் விலையை உயா்த்துகிறது மொ்சிடிஸ் பென்ஸ்

DIN

ஜொ்மனியைச் சோ்ந்த சொகுசு காா் தயாரிப்பு நிறுவனமான மொ்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் விற்பனையாகும் காா்களின் விலையை 2 சதவீதம் வரை உயா்த்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 6-7 மாதங்களாகவே யூரோவுக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்தே காணப்படுகிறது. இந்த நிலையில், இதர இடுபொருள் செலவினங்களும் கணிசமான அளவில் உயா்ந்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சில குறிப்பிட்ட மாடல் மொ்சிடிஸ் பென்ஸ் காா்களின் விலையை வரும் அக்டோபரிலிருந்து 2 சதவீதம் வரை உயா்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது என மொ்சிடிஸ் பென்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது. எந்தெந்த மாடல்களின் விலை உயா்த்தப்படும் என்பதை அந்த நிறுவனம் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடவில்லை. இருப்பினும், சி-கிளாஸ், இ-கிளாஸ், மற்றும் ஜிஎல்சி மாடல்களின் விலை ரூ.1.5 லட்சம் வரை உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT