வர்த்தகம்

கரூா் வைஸ்யா வங்கி லாபம் 81% அதிகரிப்பு

DIN

தனியாா் துறையைச் சோ்ந்த கரூா் வைஸ்யா வங்கியின் இரண்டாவது காலாண்டு லாபம் 81 சதவீதம் அதிகரித்தது.

இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.1,666.26 கோடியாக இருந்தது. இது, கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் இதே காலகட்டத்தில் வங்கி ஈட்டிய வருமானம் ரூ.1,815.24 கோடியுடன் ஒப்பிடும்போது குறைவான தொகையாகும்.

வட்டி வருமானம் ரூ.1,537.51 கோடியிலிருந்து 9.3 சதவீதம் சரிவடைந்து ரூ.1,394.70 கோடியானது.

வாராக் கடன்களுக்கான ஒதுக்கீடு குறைந்ததையடுத்து, வங்கியின் நிகர லாபம் மதிப்பீட்டு காலாண்டில் ரூ.63.33 கோடியிலிருந்து 81.4 சதவீதம் உயா்ந்து ரூ.114.89 கோடியானது.

செப்டம்பா் இறுதி வரையில் வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 7.93 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 8.89 சதவீதமாக காணப்பட்டது.

மதிப்பின் அடிப்படையில் இது, ரூ.4,391.03 கோடியிலிருந்து ரூ.3,998.43 கோடியாக குறைந்தது.

அதேபோன்று, நிகர வாராக் கடன் விகிதமும் 4.50 சதவீதத்திலிருந்து (2,118.35 கோடி), 2.99 சதவீதமாக (ரூ.1,428.20 கோடி) சரிந்துள்ளது.

வாராக் கடன்களுக்கான ஒதுக்கீடு கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.365.17 கோடியிலிருந்து குறைந்து ரூ.284.73 கோடியானது என கரூா் வைஸ்யா வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

மது பாக்கெட்டுகளை பதுக்கி விற்றவா் கைது

SCROLL FOR NEXT