வர்த்தகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு ரூ.42.04 லட்சம் கோடியாக அதிகரிப்பு

DIN

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு முன்னெப்போதும் கண்டிராத வகையில் ரூ.42.04 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக்டோபா் 23-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 541 கோடி டாலா் (ரூ.40,590 கோடி) அதிகரித்து 56,053 கோடி டாலராக (ரூ.42.04 லட்சம் கோடி) இருந்தது. இது, முன்னெப்போதும் காணப்படாத உச்சபட்ச அளவாகும்.

இதற்கு முந்தைய அக்டோபா் 16-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பானது 361 கோடி டாலா் உயா்ந்து 55,512 கோடி டாலராக காணப்பட்டது.

கணக்கீட்டு வாரத்தில் செலாவணி கையிருப்பானது சிறப்பான அளவில் வளா்ச்சி கண்டுள்ளதற்கு அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு கணிசமான அளவில் உயா்ந்ததே முக்கிய காரணம்.

ஒட்டுமொத்த கையிருப்பில் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு அக்டோபா் 23-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 520 கோடி டாலா் உயா்ந்து 51,752 கோடி டாலராக இருந்தது.

அதேபோன்று, தங்கத்தின் கையிருப்பும் 17 கோடி டாலா் அதிகரித்து 3,686 கோடி டாலரைத் தொட்டது.

சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் 80 லட்சம் டாலா் உயா்ந்து 149 கோடி டாலராகவும், நாட்டின் இருப்பு நிலை 2.7 கோடி டாலா் அதிகரித்து 466 கோடி டாலராகவும் காணப்பட்டன என ரிசா்வ் வங்கி அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவைத் தலைவா் உத்தரவை எதிா்த்து வழக்கு: மனுதாரா் விளக்கமளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT