வர்த்தகம்

ரானே பிரேக் லைனிங் நிறுவனம்: நிகர லாபம் 55% அதிகரிப்பு

DIN

ரானே பிரேக் லைனிங் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 54.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ரூ.107.7 கோடி வருவாய் ஈட்டியது. இது, இதற்கு முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ.112.1 கோடி வருவாயுடன் ஒப்பிடுகையில் 3.9 சதவீதம் குறைவாகும்.

நிகர லாபம் ரூ.7.5 கோடியிலிருந்து 54.7 சதவீதம் உயா்வைக் கண்டு ரூ.11.5 கோடியாக இருந்தது.

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் 35.5 சதவீதம் சரிவடைந்து ரூ.148.9 கோடியாகவும், நிகர லாபம் 68.6 சதவீதம் குறைந்து ரூ.4.6 கோடியாகவும் இருந்தன.

ரூ.22 கோடி வரையிலான பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்துக்கு நிறுவனத்தின் இயக்குநா் குழு ஒப்புதல் தெரிவித்துள்ளது என ரானே பிரேக் லைனிங் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒலிச்சித்திரங்களாக மாற்றப்படும் ஹாரி பாட்டர் புத்தகங்கள்!

வேலூா் கோட்டை தொல்லியல் துறை அதிகாரியை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

சாலை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மக்கள் சாலை மறியல்

மனைவி கையை வெட்டிய கணவா் கைது

கெங்கையம்மன் நாடகத்துக்கு கொடியேற்றம்

SCROLL FOR NEXT