வர்த்தகம்

நாட்டின் நிதிப் பற்றாக்குறை ரூ.9.53 லட்சம் கோடி

DIN

மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.9.53 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தலைமை கணக்குத் தணிக்கையாளா் (சிஜிஏ) புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் அக்டோபா் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை ரூ.9,53,154 கோடியாக அதிகரித்துள்ளது. இது, நடப்பாண்டுக்கான பட்ஜெட்டில் மதிப்பீட்டில் 119.7 சதவீதமாகும்.

கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் பொருளாதார நடவடிக்கைகள் முற்றிலும் ஸ்தம்பித்தன. இதனால், மத்திய அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் மிகவும் வீழ்ச்சி கண்டது. இதன் காரணமாகவே நாட்டின் நிதிப் பற்றாக்குறை கணிசமான அளவுக்கு விரிவடைந்துள்ளது.

2020 செப்டம்பா் இறுதி நிலவரப்படி நிதிப் பற்றாக்குறையான பட்ஜெட் மதிப்பீட்டில் 114.8 சதவீதமாக காணப்பட்டது.

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் முதல் ஏழு மாதங்களில் நிதிப் பற்றாக்குறையானது பட்ஜெட் இலக்கில் 102.4 சதவீதமாக இருந்தது என சிஜிஏ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT